வடிவியல்

குறுக்கு வெட்டி

             இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டு நேர்கோடு குறுக்கு வெட்டி எனப்படும்.
                        
                கொடுத்துள்ள கோடுகள் இணை கோடுகளாகவும் இணைகோடுகளாகவும் இல்லாமலும் இருக்கலாம்.

குறுக்கு வெட்டியால் ஏற்படும் கோணங்களின் பெயர்கள்:

  
 
       இரு கோடுகள் வெட்டூம் போது 1லிருந்து 8 வரை குறிப்பிட்டடுள்ளகோணங்கள்  சிறப்புப் பெயர்களை கொண்டுள்ளது.

1.உட்கோணங்கள்

AB மற்றும் CD  க்கு இடையில் அமைந்துள்ள கோணம்.<3,<4,<5,<6  என்பன உட்கோணங்கள்.

  ஒன்று விட்ட கோணங்களில் உட்கோணங்கள்:

     ஒரு குறுக்கு வெட்டி இரு கோடுகளை வெட்டும் போது நான்கு உட்கோணங்கள் உண்டாகிறது.
     <3,மற்றும் <5, <4 மற்றும் <6 ,   என்பவை ஒன்று விட்ட கோணங்களில் உட்கோணங்கள்.

3.வெளிக் கோணங்கள்:

      MN  என்ற கோட்டுத்துண்டை ஒரு கையாக கொள்ளாமல் உள்ள எல்லா கோணங்கள் வெளிக்கோணங்கள் எனப்படும்.<1,<2,<7,<8  என்பன வெளிக்கோணங்கள்.

4.ஒன்று விட்ட கோணங்களில் வெளிக்கோணங்கள்:

  வெளிக்கோணங்கள் குறுக்குவெட்டியில் எதிர் பக்கங்களில் அமைந்த தனித்தனியாக நேரியல் கோணங்கள் ஒன்று விட்ட கோணங்களில் வெளிக்கோணங்கள் ஆகும்.
            <1 மற்றும் <7 ,<2 மற்றும் <8  என்பன ஒன்று விட்ட கோணங்களில் வெளிக்கோணங்கள் ஆகும்.

5.ஒத்த கோணங்கள்:

           இரண்டு கோணங்களும் சேர்ந்து நேர்க்கோணத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் கோணங்கள் ஒத்த கோணங்கள் ஆகும்.

     <1 மற்றும்<5 ,<2 மற்றும்<6, <3 மற்றும்<7, <4 மற்றும் <8.

Comments

Popular posts from this blog