அளவைகள்
சாய்சதுரத்தின் பரப்பளவு காணல்:
அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்கும் ஓர் இணைகரம் சாய்சதுரம் எனப்படும்.
சாய்சதுரத்தின் அடிப்பக்கம் b அலகு என்றும் அதற்கேற்ற குத்துயரம் h என்றும் கொள்வோம்.
சாய்சதுரம் ஓர் இணைகரம் என்பதால் அதே சூத்திரத்தை பயன்படுத்தலாம்.
சாய்சதுரத்தின் பரப்பளவு =b*h ச.அலகுகள்
சாய்சதுரத்தின் பண்பு:
- எல்லாப் பக்கங்களும் சமம்
- எதிரெதிர்ப் பக்கங்கள் இணையாகும்.
- சாய்சதுரத்தின் மூலைவிட்டம் அந்த சாய்சதுரத்தை இரு முக்கோணங்களாகப் பிரிக்கும்.
சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2*d1*d2 ச.அலகுகள்
=1/2*( மூலம் சட்டங்களின் பெருக்கற்பலன்)ச.அலகுகள்
எடுத்துக்காட்டு
ஒரு பூந்தோட்டம் சாய்சதுரம் வடிவில் உள்ளது.அதன் மூலைவிட்டங்கள் 18 மீ ,25மீ பூந்தோட்டத்தின் பரப்பளவு காண்க:
தீர்வு
d1=18மீ d2=25
சாய்சதுரத்தின் பரப்பளவு =1/2*d1*d2 ச.அலகுகள்
=1/2*18*25
பூந்தோட்டத்தின் பரப்பளவு =225 மீ^2
Comments
Post a Comment