காரணிப்படுத்தல்

ax^2+bx+c ன் நேரிய காரணிகள் (kx+m) மற்றும் (lx+n) என்ற அமைப்பில் இருக்கும்.

எனவே  ax^2+bx+c = (kx+m)(lx+n) =klx^2+(lm+kn)x+mn

   x^2, x ன் கெழு மற்றும் மாறிலி உறுப்புக்களை இருபுறமும் ஒப்பீடு செய்யும் போது a=kl , b=(lm+kn) , c=mn எனக் கிடைக்கும்.

எ.கா:

காரணிப்படுத்துதல்  2x^2+15x+27

தீர்வு:

 ax^2+bx+c  உடன் 2x^2+15x+27 ஐ சமப்படுத்த

a=2 , b=15 , c =27

பெருக்கற்பலன் ac=2*27=54  மற்றும் கூடுதல்  b =15

6,9 என்ற காரணிகள்  b=15 & ac=54 என்பதை நிறைவு  செய்கிறது.

2x^2+15x+27 = 2x^2+6x+9x+27

                         =2x(x+3)+9(x+3)

2x^2+15x+27  =(x+3)(2x+9)

Comments

Popular posts from this blog