இயற்கணிதம்

ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக் கோவை:

                 P (x)=a(n)x^n+..............++a2x^2+a1x^1+a௦என்ற வடிவியல் அமைந்த ஒர் இயற்கணித கோவை பல்லுறுப்புக்  கோவை எனப்படும்.

                       இங்கு xன் படி 'n'  மேலும் a0,a1,a2,.........ஆகியவை மாறிலிகள்.

பல்லுறுப்புக் கோவையின் திட்ட  வடிவம்:

                   P(x) என்ற பல்லுறுப்புக்  கோவையை அதன் x  ன் அடுக்கை பொறுத்து இறங்கு வரிசையில் அல்லது ஏறுவரிசையிலோ எழுதுவது பல்லுறுப்புக் கோவையின் திட்ட  வடிவம் எனப்படும்.
      
               2x^4+ 4x^3 -7x^2 - 9x + 6  இங்கு x என் படிகள் அனைத்தும் ஏறுவரிசையில் உள்ளதால் இது பல்லுறுப்புக் கோவையின் திட்ட  வடிவம் எனப்படும்.
 

படியின் அடிப்படையில் பல்லுறுப்புக் கோவை:

  1. மாறிலி பல்லுறுப்புக்  கோவை
  2. ஒருபடி பல்லுறுப்புக்  கோவை
  3. இருபடி பல்லுறுப்புக்  கோவை
  4. முப்படி பல்லுறுப்புக்  கோவை

  1. மாறிலி பல்லுறுப்புக்  கோவை:    
                                       பல்லுறுப்புக்  கோவை படி பூஜ்ஜியம் எனில் அது மாறிலி பல்லுறுப்புக்  கோவை

எ . கா

      5,-7,2/3

ஒருபடி பல்லுறுப்புக்  கோவை:

          பல்லுறுப்புக் கோவையின் படி ஒன்று  எனில் 

ஒருபடி பல்லுறுப்புக்  கோவை எனப்படும்.

எ . கா

               410x -7

இருபடி பல்லுறுப்புக்  கோவை:

                     பல்லுறுப்புக் கோவையின் படி இரண்டு எனில் இருபடி பல்லுறுப்புக்  கோவை எனப்படும்.

எ . கா

2√5 x^2 +5x -7

முப்படி பல்லுறுப்புக்  கோவை:

            பல்லுறுப்புக் கோவையின் படி  மூன்று எனில் முப்படி பல்லுறுப்புக்  கோவை எனப்படும்.

எ . கா

    12y^3, 6m^2 -7m+4

Comments

Popular posts from this blog