இயற்கணிதம்
காரணித்தேற்றம்:
P(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி n>1 மற்றும் a என்பது ஒரு மெய்யெண் எனில்
1) P(a) =0 ஆக உள்ளபோது (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி ஆகும்.
2) (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி எனில் P(a) =0 ஆகும்.
தீர்வு:
P(x) என்பது வகுபடும் கோவை மற்றும் (x- a) வகுக்கும் கோவை.
பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல் விதியின் படி ,
P(x) =(x- a) q(x)+ p( a) இதில் q(x) என்பது ஈவு மற்றும் மீதி p( a) ஆகும்.
1) P(a) =0 எனில் P(x) =(x- a) q(x) ஆகும்.மேலும் (x- a) என்பது P(x) இன் ஒரு காரணி.
2) (x- a) என்பது P(x) இன் ஒரு காரணியானதால்,
P(x) =(x- a) g(x)
P (a) =(a -a)g (a)
=0 *g (a)
=0
(x- a) என்பது P(x) இன் ஒரு காரணி எனில் எனில் P (a) =0
எடுத்துக்காட்டு:
2x^3 -6 x^2 +mx +4 இன் ஒரு காரணி ( x -2) எனில் m இன் மதிப்பு காண்க:
தீர்வு:
P(x) =2x^3 -6 x^2 +mx +4 என்.
காரணித்தேற்றத்தின் படி, P(2) =0 எனில் ( x -2) ஒரு காரணியாகும்.
P(2) =0
2(2)^3-6(2)^2 +m(2). +4=0
2(8)-6(4) +2m +4=0
-4 +2m =0
M =2
Comments
Post a Comment