இயற்கணிதம்
மாறி,மாறிலி,கெழுக்குகள் மற்றும் உறுப்புகள்:
மாறி வரையறு:
வெவ்வேறு எண் மதிப்புகளை பெற கூடிய ஒர் உறுப்பு மாறி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
a,b,c, x, y,z
மாறிலி வரையறு:
நிலையான எண் மதிப்புகளை கொண்ட ஒர் உறுப்பு மாறிலி எனப்படும்.
எடுத்துக்காட்டு:
3, 12,-3,-4
எண்கோவை வரையறை:
எண்கணித செயல்பாடுகள் மூலமாக சேர்த்து எழுதப்பட்ட எண்கள் எண்கோவை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
3+(4*5), 5-(4*6)
உறுப்பு
ஒரு மாறிலியாகவோ அல்லது ஒரு மாறியாகவோ அல்லது மாறிலி மற்றும் மாறிகளின் பெருக்லின் சேர்க்கையே ஒர் உறுப்பு எனப்படும்.
எடுத்துக்காட்டு:
3x^2+6x-5 என்ற கோவையில் 3x^2, 6x, -5 என்பவை கோவையின் உறுப்பு ஆகும்.
Comments
Post a Comment