மெய்யெண்கள்

முறுடுகள்:

             முறுடு என்பது ஒரு விகிதமுறு எண்ணின் விகிதமுறா மூலம் ஆகும். n√a என்பது ஒரு முறுடு, n€N, n>1 ,'a' ஒரு விகிதமுறு எண்.

முறுடின் வரிசை:

                     ஒரு முறுடானது எந்த மூலத்திலிருந்து பெறப்படுகிறதோ, அந்த மூலத்தின் வரிசை அந்த முறுடின் வரிசை எனப்படுகிறது.
                           n√a என்ற முறுடின் வரிசை n ஆகும்.

முறுடின் வகைகள்:

(1) ஒரே வரிசை கொண்ட முறுடுகள்:

                      இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறுடுகளின் வரிசைகள் சமம் எனில் அந்த முறுடுகள் ஒரே வரிசை கொண்ட முறுடுகள்.

எடுத்துக்காட்டு:

√3, 3√10 மற்றும்8^2/5 வெவ்வேறு வரிசை கொண்ட முறுடுகள்.

(2). முறுடின் எளிய வடிவம்:

       ஒரு முறுடின் எளிய வடிவம் என்பது அதை விகிதமுறு மற்றும் விகிதமுறா காரணிகளின் பெருக்கலாக எழுதும்போது விகித முறா  காரணிகளின் 3 விதிகள்.
  1. மூலத்தின் வரிசை இயன்ற அளவு மிகச் சிறியதாய்  இருக்க வேண்டும்.
  2. மூலக் குறியீட்டின் வரிசை பின்னமாக இருத்தல் கூடாது.
  3. வரிசை nகொண்ட மூலக் குறியீட்டுக்குள் a^n வடிிிவில் எந்த ஒரு காரணியும் இருத்தல் கூடாது.

(3)  முழுமையான மற்றும் கலப்பு முறுடுகள்:

முழுமையான முறுடுகள்:

                  எளிய வடிவில் ஒரு முறுடின் கெழு அல்லது குணகம் 1 எனில் அந்த முறுடு முழுமையான முறுடுகள் எனப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

√3, 3√6, 5√49  ஆகியவை முழுமையான முறுடுகள்.

கலப்பு முறுடுகள்:

ஒரு முறுடின் எளிய வடிவம் அதன் கெழு அல்லது குணகம் 1 ஐத் தவிர வேறு ஓர் எண்ணாக இருப்பின் கலப்பு முறுடுகள் எனப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

5√3, 2√5 ஆகியவை  கலப்பு முறுடுகள் 

(4)ஈருப்பு முறுடு:

      கூட்டல் அல்லது கழித்தல் முறையில் இணைத்து எழுதப்பட்ட விரிவில் இரண்டு முறுடாகவோ அல்லது ஒன்று விகிதமுறு எண் மற்றொன்று ஒரு முறுடாகவோ இருப்பின் அது ஈருப்பு முறுடு எனப்படுகிறது.

எடுத்துக்காட்டு:

(1/2 ) -√19 ,5 +√2 ,√3-2√6 ஆகியவை ஈருப்பு முறுடுகள் ஆகும்:


Comments

Popular posts from this blog