மெய்யெண்கள்

அறிவியல் குறியீட்டு வடிவம்:

                               கதிரவனின் விட்டம் 13,92,000 கி.மீ மற்றும் பூமியின் விட்டம் 12,740 கீ.மீ இவற்றை ஒப்பிட கடினமானது ,மாறாக 13,92,000 என்பதை 1.392.*10^6. எனவும் 12,740 என்பதை  1.274 *10^4,  எனவும் கொடுத்தால் அது எளிமையான தோன்றும் இந்த வடிவமைப்பு அறிவியல் குறியீட்டு வடிவம் எனப்படும்.
 
                  1.392.*10^6.           14
                   ----------------------   ~  ------ * 10^2. =108
                   1.274 *10^4,           13
 

அறிவியல் குறியீட்டு வடிவில் எண்களை எழுதுதல்:

  1. தசமப் புள்ளிக்கு இடப்பக்கம் ஒரேயொரு பூச்சியமற்ற எண் இருக்குமாறு தசமப் புள்ளியை நகர்த்துக.
  2. தசமப் புள்ளிக்கு  இடையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. இதை 'n' என்க 
  3. தசமப் புள்ளியானது இடப்பக்கம் நகர்த்தப்பட்டிருந்தால் அடுக்கு 'n' ஆனது மிகை எண் ஆகும்.அது வலப்பக்கம் நகர்த்தப்பட்டிருந்தால் அடுக்கு 'n' ஆனது குறை எண் ஆகும்.

அறிவியல் குறியீட்டு வடிவம்  வரையறு:

                   N என்ற எண்ணை N =a *10 ^n என எழுதலாம். இங்கே 1<a<10, 'n' ஒரு முழு என்றவாறு குறித்தல்  அறிவியல் குறியீட்டு வடிவம் எனப்படும்.

அறிவியல் குறியீட்டு வடிவில் உள்ள  எண்களின் கணக்கீடுகள்:

எடுத்துக்காட்டு:

     பூமியின் நிறை 5.97  *10 ^24  கி.கி நிலாவின் நிறை 0.073 *10^24 கி.கி  இவற்றின் மொத்த நிறை என்ன?

தீர்வு:

மொத்த நிறை = 5.97  *10 ^24 கி.கி +0.073 *10^24 கி.கி

                                  = (5.97 +0.073).*10 ^24 கி.கி
   மொத்த  நிறை  = 6.043 *10 ^24 கி.கி
               
                                

Comments

Popular posts from this blog