Posts

   காரணிப்படுத்தல் ax^2+bx+c ன் நேரிய காரணிகள் (kx+m) மற்றும் (lx+n) என்ற அமைப்பில் இருக்கும். எனவே  ax^2+bx+c = (kx+m)(lx+n) =klx^2+(lm+kn)x+mn    x^2, x ன் கெழு மற்றும் மாறிலி உறுப்புக்களை இருபுறமும் ஒப்பீடு செய்யும் போது a=kl , b=(lm+kn) , c=mn எனக் கிடைக்கும். எ.கா: காரணிப்படுத்துதல்  2x^2+15x+27 தீர்வு:  ax^2+bx+c  உடன் 2x^2+15x+27 ஐ சமப்படுத்த a=2 , b=15 , c =27 பெருக்கற்பலன் ac=2*27=54  மற்றும் கூடுதல்  b =15 6,9 என்ற காரணிகள்  b=15 & ac=54 என்பதை நிறைவு  செய்கிறது. 2x^2+15x+27 = 2x^2+6x+9x+27                          =2x(x+3)+9(x+3) 2x^2+15x+27  =(x+3)(2x+9)
                     இயற்கணிதம்                 காரணிப்படுத்துதல் காரணிப்படுத்தலில் இரு முக்கிய வழிகள்: 1) பொதுவான காரணிமுறை          ab + ac          a.b+a.c           a(b+c) 2)குழுவாக அமைத்தல்        a+b-pa-pb      ( a+b)-p( a+ b)          ( a+b)(1-p) மீப்பெரு பொது வகுத்தி:         இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பல்லுறுப்பக் கோவைகளின்  மீப்பெரு பொது வகுத்தியானது அதன் பொதுக் காரணிகளுள் அதிகபட்ச பொதுப்படியைக் கொண்ட ஒரு  பல்லுறுப்பக் கோவையாகும். மீப்பெரு; பொதுக் காரணி ஆகும். எ.கா (Y^3+1) மற்றும் ( y^2-1)  மீ.பொ வ காண்க தீர்வு (Y^3+1) =(y+1) (y^2- y+1) ( y^2-1) = (y+1)(y-1) மீ.பொ வ= (y+1)
                      இயற்கணிதம் மூன்று ஈருறுப்புக் கோவைகளின் பெருக்கற்பலனை உள்ளடக்கிய முற்றொருமைகள்:              (X+ a)( X+b)(X+c) =[ (X+ a)( X+b)] (X+c)                                               =[ X^2 +(a+ b)x +ab] (X+c)                                               = X^2(x)+ (a+ b)x(x)+ab(x)+x ^2c+ (a+ b)(x)c+abcd                                               =x^3+ax^2+b x^2+c x^2+acx+bcx+abx                                           ...
                     இயற்கணிதம்   இயற்கணித    முற்றொருமைகள்: (a +b )^2 =a^2 +2ab+b ^2 (a - b)   ^2=  a^2 -2   ab+b ^2     (a +b )(a - b)  = a^2 -b ^2    (x+a) (x +b) =x ^2+(a +b )x +ab எடுத்து காட்டு: முற்றொருமைகள் பயன்படுத்தி விரித்தெழுதுக: 1)(3x+4y)^2 தீர்வு:             (3x+4y)^2.                     [ (a +b )^2 =a^2 +2ab+b ^2]           a=3x, b=4y (3x+4y)^2. =(3x)^2 +2(3x)(4y) + (4y)^2                      =9x^2+24xy+16^2 (a+b+ c) என்ற மூவுறுப்புக் கோவையின் விரிவாக்கம்:                       (x + y)^2=  x^2 +2xy ^2+y^2 X= (a +b), y = c என  பிரதியிட,   (a+b+ c) ^2= (a +b)^2 +2 (a +b)(c) +c^2 ...
                      இயற்கணிதம் காரணித்தேற்றம்:      P(x) என்ற பல்லுறுப்புக் கோவையின் படி n>1  மற்றும் a என்பது ஒரு மெய்யெண் எனில்      1)  P(a) =0 ஆக உள்ளபோது (x- a) என்பது  P(x)  இன் ஒரு காரணி ஆகும்.      2)   (x- a) என்பது  P(x)  இன்  ஒரு காரணி எனில்  P(a) =0  ஆகும். தீர்வு:   P(x)   என்பது வகுபடும் கோவை மற்றும்    (x- a) வகுக்கும் கோவை. பல்லுறுப்புக் கோவையின் வகுத்தல் விதியின் படி ,                     P(x) = (x- a) q(x)+ p( a) இதில்  q(x) என்பது ஈவு மற்றும் மீதி  p( a)  ஆகும். 1)  P(a) =0 எனில்  P(x) = (x- a) q(x)  ஆகும்.மேலும்  (x- a) என்பது  P(x) இன் ஒரு காரணி.   2)   (x- a)  என்பது  P(x)  இன்  ஒரு காரணியானதால்,         ...
                   இயற்கணிதம் பல்லுறுப்புக் கோவைகள்:                ஒரு  பல்லுறுப்புக் கோவை என்பது மாறிகள் மற்றும் மாறிலிகளைக் கொண்டு நான்கு அடிப்படைச் செயல்களால் இணைக்கப்பட்ட தொகுப்பு ஆகும். இங்கு மாறிகளின் அடுக்கு குறையற்ற முழுக்கள் ஆகும். பல்லுறுப்புக் கோவையின் பூச்சியம்:                           P (x) என்ற பல்லுறுப்புக் கோவையின் மீதி p( a) =0 எனில்' a' என்பது    P (x) இன் பூச்சியம் அல்லது  பல்லுறுப்புக் கோவை சமன்பாடு  P (x)  =0 எனபதன் மூலம் ஆகும். மீதித்தேற்றம்:         (X ^2 -6x +8) ஐ (x -3)ஆல் வகுக்க: தீர்வு: x -3 =0 x=3   P(3)=3^2 -6(3) +8          =9 -18 +8         = -1 எனவே    (x -3) என்பது  P (x)  இன் ஒரு காரணியல்ல.        
Image
                      அளவைகள்  குறுக்கு வெட்டி சார்ந்த கணக்குகள்: படத்தில் l || m எனில் <1  மற்றும் <2 இன் அளவுகளைக் காண்க:           தீர்வு: (3x +4)+ x =180° 4x +4 =180° 4x =180-4   4x=176       x= 176÷4       x =44°  <1=44° <1+<2=180° 44°+<2 =180°        <2=180°-44°       <2=136°